×

புதுக்கோட்டை அருகே முத்துக்குடா கடலோரத்தில் ஒதுங்கிய இலங்கை படகு-உளவுபிரிவு போலீசார் ரகசிய விசாரணை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை கடற்பகுதியில் ஆளில்லாத, பழுதடைந்த நெயில் மெரையின் என்று பெயருள்ள இலங்கைப் படகு கரை ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் அருகேயுள்ள கடலோர கிராமமான முத்துக்குடா உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பழுதடைந்த படகு ஒன்று கரை ஒதுங்கியதை மீனவர்கள் பார்த்துள்ளனர். இலங்கை படகு என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல் படையினரினரின் முதல் கட்ட விசாரணையில் அடிப்பகுதியில் ஓட்டைகளை கொண்ட பழுதடைந்த படகு என்றும், இலங்கையை சேர்ந்த படகு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரான “நெயில் மெரையின்” என்றும் எழுதியிருப்பதும் தெரியவந்தது. மேலும், அப்படகில் ஓஎப்ஆர்பி ஏ 1459 என்ற எண்ணும் எழுதப்பட்டிருந்தது. மோட்டார் ஏதும் பொருத்தப்படவில்லை. பழுதடைந்த படகு என்பதால் ஆட்கள் யாரும் வந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இலங்கையை சேர்ந்தது என்பதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவியது.தகவல் அறிந்த புதுக்கோட்டை உளவுப்பிரிவு காவலர்களும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில் இப்படகு, சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்….

The post புதுக்கோட்டை அருகே முத்துக்குடா கடலோரத்தில் ஒதுங்கிய இலங்கை படகு-உளவுபிரிவு போலீசார் ரகசிய விசாரணை appeared first on Dinakaran.

Tags : intelligence ,Muthukoda ,Pudukottai ,Muthukuda ,Pudukottai-Intelligence Division ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த...