×

5 லட்சம் குட்கா பொருட்கள் வேனுடன் பறிமுதல்: 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை, போலீசார் வேனுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லி பகுதிக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை சந்தவேலூர் பகுதியில் நேற்று அதிகாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த மினி லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர். மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் என தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து, வேனுடன், 675 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.அதில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சிந்தாமணி நகரை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (28), கோவில்பட்டி, பத்ரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த லோடுமேன் அருண் கிருஷ்ணகுமார் (23) என தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு 5 லட்சம் என கூறப்படுகிறது….

The post 5 லட்சம் குட்கா பொருட்கள் வேனுடன் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperudur ,Bangalore ,Chennai ,
× RELATED பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர்...