×

அடிக்கடி விபத்து ஏற்படும் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோர கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

சேதுபாவாசத்திரம் : தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை அப்புறபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் அசாருதீன் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் மல்லிபட்டினம் சேதுபாவாசத்திரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையின் வழியாக சென்னையில் இருந்தும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகள் என போக்குவரத்து அதிகமாக உள்ளது.அதுமட்டுமின்றி இந்த சாலையின் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அதிவேகத்துடன் செல்கின்றது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கேற்றார்போல் அதிராம்பட்டினத்தில் இருந்து சேதுபாவாசத்திரம் முதல் கட்டுமாவடி வரை சாலை ஓரங்களில் மிகவும் அதிகமான அளவிற்கு கருவேலமரங்கள் உற்பத்தியாகி உள்ளது.இந்த மரங்களின் கிளைகள் எதிரே வரக் கூடிய வாகனங்களை மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் ஓரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு முடியாத நிலை உள்ளது. சாலைகளின் நடுவே நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் விபத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக மல்லிப்பட்டினம் ஐஓபி வங்கி அருகில் இருந்து அதிகமான அளவு கருவேல மரங்கள் உற்பத்தியாகி உள்ளது. இந்த பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடக்கின்றன.எனவே சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்….

The post அடிக்கடி விபத்து ஏற்படும் சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோர கருவேல மரங்களை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sethubavasatram ,Setupavasatram ,Tanjore district ,Dinakaran ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...