×

உலகம் உள்ள வரை சிவாஜி புகழ் இருக்கும்: அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்

மதுரை: சிவாஜியின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் என அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். நடிகர் சிவாஜியின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் வி.என்.சி.வள்ளியப்பன், திமுக பொதுக்குழு உறுப்பினர் அழகுபாண்டி, மாணவரணி மருதுபாண்டி, நெசவாளர் அணி மூவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நடிகர் சிவாஜி சிலை நிறுவ திமுக தலைவர் கருணாநிதி அனுமதி வழங்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் சிவாஜி சிலை நிறுவப்பட்டது. தனது சிறந்த நடிப்பால் நாட்டு நடப்புகளை, நல் நிகழ்வுகளை ஏழை-எளிய மக்களுக்கு எடுத்து கூறினார். சிவாஜியின் புகழ், உலகம் உள்ளவரை இருக்கும்’ என்றார். மேலும் அமைச்சர் கூறுகையில், ‘பத்திர பதிவுத்துறையில் ஒரு சார்பதிவாளர் மீது புகார் வந்துள்ளது. அந்த புகார் உண்மை என்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்….

The post உலகம் உள்ள வரை சிவாஜி புகழ் இருக்கும்: அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Shivaji ,Minister B. Moorthi ,Madurai ,Minister ,B. Moothie ,B. Morthi ,
× RELATED நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் காந்தி,...