×

கூடவே இருந்து விஜிலென்சில் மக்கள் பிரதிநிதி பற்றி போட்டு கொடுத்த இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் பவர்புல்லாக இருந்த அதிகாரிகள் திருந்த சான்ஸ் இருக்கா…’’ என சந்தேகத்தை கிளப்பினார் பீட்டர் மாமா.  ‘‘ராமநாதபுரம், ‘ஆலயத்துறையில்’ ஒற்றை இணை அதிகாரியாக ‘செல்வமானவர்’ இருக்கிறார். கடந்த இலை ஆட்சியில் ‘மேலிட செல்வாக்கால்’ பவர்புல்மேனாக வலம் வந்தார். தன் சொல்லை கேட்காத அதிகாரிகள், அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தடைக்கல்லாக இருந்து இருக்கிறார். எந்த வகையில் பணம் சுருட்டலாம் எனச் சிந்தித்து அதற்கென புது வழியைக் கண்டறிந்து வசூல் செய்வாராம். இந்நிலையில் கடந்தாண்டு இவர் ஒரு புத்தகம் எழுதினார். இதில், சுயபுராணமே அதிகமாக இருந்துள்ளது. இதனை பிரிண்ட் போடுவதற்கு ஆலயப்பணியாளர்கள், அலுவலர்கள், அர்ச்சகர்கள் துவங்கி மணி அடிப்பவர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பணம் கறந்து விட்டாராம். இதுதவிர, இரு மாவட்டங்களிலும் உள்ள பிரசித்திப்பெற்ற கோயில்களுக்கு வரும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிமாநிலத்தவர்கள் என முக்கிய விஐபிகளுக்கு முதல் தர தரிசனம் ஏற்பாடுகளை செய்ய சொல்லி, அவர்களிடமும் நிதி திரட்டப்பட்டதாம். இப்படி கிடைத்த வருவாய் மூலம் புத்தகத்தை பிரிண்ட் செய்துள்ளார். இந்த புத்தகத்தை ‘தாமரை’ கட்சியினரை கொண்டு வெளியிடவும், இதற்கெனவும் ஒரு வசூல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன என்று கோயில் ஊழியர்கள் தீவிரமாக இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தெர்மோகோல் மாஜி அமைச்சர், வாயே திறக்காவிட்டாலும், அடிப்பொடிகள் கலக்கிட்டு வர்றாங்களாமே,,.’’ என சொல்லி சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கண்மாயில், கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் தற்போது தான் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான், மதுரை ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாம். யாரும் மீன் பிடிக்கக்கூடாது என மீன்வளத்துறை சொல்லி இருக்காம். இந்தக் கண்மாய் இருக்கும் பகுதி, முன்னாள் தொர்மோகோல் தொகுதிக்குள் வருகிறது. ஆகவே, கடந்த ஆட்சியில், அவரின் கடைக்கண் பார்வையில், மீன் வளர்ப்பு, தனியார் மீன் ஏலம் விட்டாங்க… இதை, அப்போது இருந்த அரசு அதிகாரிகளும் மாஜிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் கண்டுகொள்வில்லையாம். அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்மாய் மீன் ஏலம் எடுத்து, பல லட்சம் சம்பாதித்துள்ளனர். இதில் என்ன கொடுமையென்றால், ஏலம் எடுத்தவர் கண்மாய் தண்ணீரை யாருடைய அனுமதியும் இன்றி, இரவோடு இரவாக வெளியேற்றிவிடுவார். அப்போதுதான், போட்ட லட்சக்கணக்கான பணத்திற்கு மீன்பிடிக்க முடியும். தண்ணீர் வீணாகப் போவதை அதிகாரிகளும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், மக்கள் தண்ணீருக்காக போராடுவார்கள்.  ஆட்சி மாற்றத்திற்குப்பின் தற்போது, கண்மாயில் மீன்பிடிக்க யாருக்கும் அனுமதியில்லை என மீன்வளத்துறை உதவி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதையும் மீறி, முன்னாள் அமைச்சரின் செல்வாக்குடன் பழைய முறையில் ₹12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டு, கடந்த 3 நாட்களாக மீண்டும் தண்ணீர் 3 மடையில் இருந்து வீணாக திறக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கேட்டால், முன்னாள்  அமைச்சர் தொர்மோகோலை சுட்டிகாட்டுகிறார்கள்.. இதனால், பொதுமக்கள் கொதித்து எழுந்துள்ளார்களாம். மக்களின் தாகம் தீர்க்க வேண்டிய தெர்மோகோல் வாயே திறக்காமல் அமைதி காத்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொந்த காசில் தனக்கு தானே, ஆப்பு வைத்துக் கொள்வதுனு சொல்றாங்களே.. யாருக்கு யார் ஆப்பு வைச்சாங்கனு சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட இலை கட்சியின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர், கடந்த 5 ஆண்டு கால இலை ஆட்சியில், டாஸ்மாக் ‘பார்’ மூலம் பல கோடிகளை குவித்துவிட்டார். மசாலா பொடி தயாரித்து, பாக்கெட் போட்டு விற்பனை செய்து வந்த இவர், இன்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் வலுவாக உள்ளார். கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் துறையில் கோலோச்சி வந்த ஒரு நபர், இவருக்கு பக்கபலமாக இருந்தார். அவர்தான், டாஸ்மாக் ‘பார்’களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய வழிவகை செய்து கொடுத்தார். அத்துடன், கலால் துறை, டாஸ்மாக்துறை, காவல்துறை அதிகாரிகள் ரெய்டு வந்தால், அவர்களை சமாளிக்கும் திறன் கொண்டவரும் அவர்தான். சமஉக்கு மிக அதிகமாக வசூல் செய்து கொடுத்ததுடன், தனது பாக்கெட்டையும் போதுமான அளவில் நிறைத்துக்கொண்டார்.தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் அந்த நபர், மக்கள் பிரதிநிதியின் பிடி, இலை கட்சியில் இருந்து விலகிவிட்டார். இவர், கடந்த காலத்தில் இலை கட்சியின் மக்கள் பிரதிநிதி செய்த தகவல்களை எல்லாம் ஒன்று திரட்டி வைத்துள்ளார். போலீஸ் பிடியில் தான் சிக்காமல் இருக்க.. தனக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்த மக்கள் பிரதிநிதி பற்றிய  உரிய ஆதாரங்களுடன் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் பட்டியல் கொடுத்துள்ளார். எல்லாவற்றுக்கும் இலை கட்சி மக்கள் பிரதிநிதி இந்த முறைகேடுகளுக்கு காரணம் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதியின் வயிற்றை கலங்கடித்துவிட்டாராம். இதை பதிவுசெய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், எப்போது வேண்டுமானாலும் அந்த சமஉ மீது கை வைப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இதைக்கேட்டு, பதறிப்போய் உள்ளார் அந்த சமஉ, ‘’கூடவே இருந்துகொண்டு, இப்படி கோர்த்து விட்டுட்டானே., பாவிப்பய… என்னால கோடி கோடியாக சம்பாதித்துவிட்டு.. என்னை தெருக்கோடியில் நிற்க வைத்துவிடுவான் போலிருக்கே,,’’ என சாபம் விட்டு வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post கூடவே இருந்து விஜிலென்சில் மக்கள் பிரதிநிதி பற்றி போட்டு கொடுத்த இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : People's Representative ,Vigilance ,wiki ,Uncle ,Peter ,Ramanathapuram ,Temple Department ,
× RELATED பஸ் டிப்போவில் விஜிலென்ஸ் விசாரணை