×

எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும்  23ம் தேதி ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமயம் நீதிமன்றத்தின் சார்பில், எச்.ராஜாவுக்கு அனுப்பப்பட்ட சம்மன் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் ெசய்யப்பட்டன. மேலும் அரசுத் தரப்பில், மனுதாரர் மீது தமிழ்நாடு முழுவதும் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் காவல் துறை மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. எனவே, சம்மனை ஏற்று மனுதாரர் அந்த நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். எனவே, இந்த முன்ஜாமீன் மனு நிலைக்கத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். …

The post எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Former National Secretary ,Bharathya Janata Party ,H.M. Raja ,Munjameen ,Ikort Madurai ,H. ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை