×

4 மொழி படத்தில் அனுஷ்கா

சென்னை: நவீன் பொலிஷெட்டி, அனுஷ்கா நடித்துள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அனுஷ்கா மற்றும் நவீன் பொலிஷெட்டியின் கதாபாத்திர இறுதிப்பெயர்களை வைத்து, ‘மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலி ஷெட்டி’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் அனுஷ்கா ‘ஹேப்பி சிங்கிள்’ என்ற புத்தகத்துடனும், நவீன் பொலிஷெட்டி ’ரெடி டூ மிங்கிள்’ என்ற வாசகத்துடனும் இடம்பெற்றுள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இந்தப் படம் கோடை விடுமுறைக்கு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.

Tags : Anushka ,
× RELATED 6 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா