×

அல்லு அர்ஜூன் நடிக்கும் 23வது படம்

ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தின் 2வது பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது அவர் நடிக்கும் 23வது படம். தெலுங்கில் விஜய் தேவர கொண்டா, ஷாலினி பாண்டே நடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா, அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டது. பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’ உள்பட பல படங்களை தயாரித்த பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

Tags : Allu Arjun ,
× RELATED திடீரென்று கிளாமருக்கு மாறிய ரஜிஷா விஜயன்