×

ட்வெய்ன் ஜான்சன் நடிக்கும் ப்ளாக் ஆடம்

சென்னை: ஜொமே கொலெட் செர்ரா எழுதி இயக்கிய படம், ‘ப்ளாக் ஆடம்’. இதில் ட்வெய்ன் ஜான்சன், ஆல்டிஸ் ஹாட்ஜ், நோவா சென்டினோ, சாரா ஷாஹி, மார்வான் கென்சாரி, க்வின்டெஸ்ஸா ஸ்வின்டெல், பியர்ஸ் ப்ரோஸ்னான் நடித்துள்ள னர். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் 15ம் தேதி பிரைம் வீடியோவில் இப்படம் வெளியாகிறது. டேனி கார்சியா, ஹிராம் கார்சியா, ப்யூ ஃப்ளின், ட்வெய்ன் ஜான்சன்
ஆகியோர் தயாரித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தப்படத்தில் ட்வெய்ன் ஜான்சன், டெத் ஆடம் ரோலில் நடிக்கிறார். அவருக்கு எல்லாம் வல்ல கடவுளர்களின் சக்தி வழங்கப்படுகிறது. பழங்கால கான்டாக்கில் (கற்பனையான ஒரு மத்திய கிழக்கு நாடு) அவரது சக்திகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக, 5 ஆயிரம் வருடங்கள் சிறை வைக்கப்பட்டார். இப்போது சுதந்திரமாக இருக்கும் ப்ளாக் ஆடம், அவரது தனித்தன்மையான நீதி வடிவத்தை வழங்குவதற்கான பயணத்தை இப்படம் உணர்த்துகிறது.


Tags : Twayne Johnson ,
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்