×

கிளாமருக்கு மாறிய நந்திதா

கன்னட நடிகையும், டப்பிங் கலைஞருமான நந்திதா ஸ்வேதா, அங்கு தனக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை என்று தமிழுக்கு வந்தார். இங்கு ‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அவர், திடீரென்று தனது கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

எல்லா மொழிகளிலும் மற்ற மாநில நடிகைகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் நிலையில், ஏற்கனவே இருந்த நடிகைகளுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இந்நிலையில், பேமிலி டைப் ரோல்களில் நடித்து வந்த நந்திதா ஸ்வேதா, திடீரென்று கிளாமருக்கு மாறியுள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இதையடுத்து புதுப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் நந்திதா ஸ்வேதா ஈடுபட்டு வருகிறார்.

Tags : Nandita ,
× RELATED மார்ச் 29ல் ரீரிலீசாகும் அழகி