×

இயக்குனரிடம் வருத்தப்பட்ட ஷீலா

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரித்துள்ள படம், ‘குடிமகான்’. பிரகாஷ்.என் இயக்கியுள்ளார். இவர் ‘குட்டி தாதா’ என்ற குறும்படத்தை இயக்கியவர். விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன், சேது, ஹானஸ்ட் ராஜ் நடித்துள்ளனர். பாலு மகேந்திரா உதவியாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தனுஜ் மேனன் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் விழாவில் பங்கேற்ற ஷீலா ராஜ்குமார் பேசும்போது, ‘நான் நடித்த ‘பேட்டக்காளி’ வெப்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் பேட்டக்காளி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் கேரக்டரில் நடித்த நான், இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வளர்த்த காளையை வாடிவாசலில் இறக்கினேன். அதன் பெயர், பாஷா.

‘குடிமகான்’ படத்தில் நானும் நடித்திருக்க வேண்டும். ‘பேட்டக்காளி’ வெப்தொடருக்கு மொத்தமாக கால்ஷீட் கொடுத்து விட்டதால் நடிக்க முடியவில்லை. அதற்காக இயக்குனரிடம் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Tags : Sheela ,
× RELATED உடற்பயிற்சி செய்பவர்கள் கட்டாயம் பாதாமை உட்கொள்ள வேண்டும்!