×

இளைஞர் மர்ம மரண விவகாரம் மது போதையில் இறந்ததாக போலீசார் தகவல்

திருப்போரூர்:  திருப்போரூர் அடுத்த ஆமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி முருவம்மாள். இவர்களுக்கு வைத்தீஸ்வரி (30) என்ற மகளும், விஜய் (25), அஜீத்குமார் (23) ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்களில் வைத்தீஸ்வரி திருமணமாகி கணவருடன் நாவலூரில் வசித்து வருகிறார். இளைய மகன் அஜீத்குமார் பிளம்பிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ்அவர் கடந்த 14ம் தேதி புதன்கிழமை பகல் 12 மணிக்கு நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை ரவி தனது மகனை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் அஜீத் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரவி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பல இடங்களில் தேடியபோது ஆமூர் ஏரிக்கரையில் உள்ள புதர் ஒன்றில் அஜீத்குமார் சடலமாக கிடந்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் அங்கு வந்து புதரில் இருந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜீத்குமார் அளவுக்கதிகமாக மது அருந்தி மயக்கமாகி இறந்துள்ளார் என்று போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். அவரது முகத்தில் உள்ள காயங்கள் கீழே விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு யாரும் தாக்கிய காயங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post இளைஞர் மர்ம மரண விவகாரம் மது போதையில் இறந்ததாக போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Amur ,Muruvammal ,Vaideshwari ,
× RELATED தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய்...