×

தமிழின் பெருமையை பேசும் படம் பராசக்தி: சிவகார்த்திகேயன்

சென்னை: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம், ‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம், தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீலீலா தமிழுக்கு வரும் முதல் படம், ஹீரோ ரவி மோகன் வில்லனாக நடிக்கும் முதல் படம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. முக்கிய வேடத்தில் அதர்வா முரளி நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார். கடந்த 1960களின் வரலாற்று பின்னணியில், மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை பேசும் படமாக உருவான இது, வரும் 10ம் தேதி உலகம் முழுக்க திரைக்கு வருகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது: சுதா கொங்கரா மேடம் சொன்னதால்தான் நடித்தேன். படத்துக்காக அவர் 5 வருடங்கள் கடுமையாக உழைத்தார். இதிலுள்ள கேரக்டர்களில் நடிப்பது எல்லோருக்குமே கஷ்டம்தான். அதை விரும்பி ஏற்றுக்கொண்டு உழைத்தோம். அதர்வா முரளிக்கும், எனக்கும் உண்மையான அண்ணன், தம்பி பாசம் இருக்கிறது. அவரது முதல் படத்துக்கான புரமோஷனுக்கு அவரது தந்தை முரளி வந்தார். நான் ஹோஸ்ட் செய்தேன். இதில் அதர்வாவுடன் நடித்ததை நினைத்து சந்தோஷப்படு கிறேன். ஸ்ரீலீலாவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன். அவருடன் நான் ஆடியபோது, கடினமான சில மூவ்மெண்டு களை கொடுக்காததற்காக டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி.

ரவி மோகனுக்கு நன்றி. ஹீரோவாக ஹிட் படங்கள் தரும் அவர், வில்லனாக நடிக்க சம்மதித்தது பெரிய விஷயம். அவர் எப்போதும் ஹீரோதான். ஜி.வி.பிரகாஷ் குமார் 100 படங்களுக்கு இசை அமைத்ததை கேட்டு அம்மா ஆச்சரியப்பட்டார். 100 படங்களிலும் ஜி.வி வித்தியாசமான ஜானர்களில் இசை அமைத்து அசத்தியுள்ளார். இது எனக்கு 25வது படமாக அமைய ஆகாஷ் பாஸ்கரன் காரணம். இதுபோல் ஒரு குழுவும், கதையும் எனக்கு கிடைத்தது என்பது ஒரு வரம். பராசக்தியின் அருள்தான் இதற்கு காரணம். ‘பராசக்தி’ படம் ஒரு முக்கிய பிரச்னை குறித்து பேசும் என்றாலும், அதில் காதல், பாசம், வீரம், புரட்சி கலந்திருக்கும். இந்த பொங்கல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். படத்தை பார்த்து ரசியுங்கள்.

Tags : Chennai ,Aakash Baskaran ,Don Pictures ,Sivakarthikeyan ,G. V. ,Prakash Kumar ,Srileela ,Ravi Mohan ,Adarva Murali ,Sudha Konkara ,
× RELATED பராசக்தி ஷூட்டிங்கில் எனக்கு...