- ரஜினிகாந்த்
- சிபி சக்ரவர்த்தி
- கமல்ஹாசன்
- சென்னை
- ஆர். மகேந்திரன்
- ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
- சுந்தர். சி
- ராம்குமார் பாலகிருஷ்ணன்
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலுக்காக கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். முன்னதாக இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவித்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர்.சி விலகினார். இந்நிலையில் கமல்ஹாசன், ‘இப்படத்தின் ஹீரோ ரஜினிகாந்துக்கு பிடித்த கதை கிடைக்கும் வரை காத்திருப்பேன்’ என்றார். இதையடுத்து ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது.
தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, ‘மகாராஜா’ படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் ரஜினிகாந்த் கதை கேட்டிருந்தார். இந்நிலையில், நேற்று கமல்ஹாசன் வெளியிட்ட அறிவிப்பின்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘டான்’ படத்தை எழுதி இயக்கியிருந்த சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்தின் 173வது படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசை அமைக்கிறார். பிரமாண்டமான முறையில் உருவாகும் இப்படம், வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
