×

சோனு நிகமை தாக்கிய எம்எல்ஏ மகன்: மேடையில் தள்ளுமுள்ளு; 2 பேர் காயம்

மும்பை: பாடகர் சோனு நிகம் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் எம்எல்ஏ மகன் செல்பி எடுக்க முயன்றார். சோனு நிகம் மறுத்ததால் அவரை எம்எல்ஏ மகன் தாக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் சோனு நிகம் பங்கேற்றார். தொடர்ந்து அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி வரும் போது அவரிடம் சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சோனு நிகமும் தாக்கப்பட்டார்.

சோனு நிகம் உடன் சென்ற இருவர், மேடையில் இருந்து கீழே விழுந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கூட்டத்தை அப்புறப்படுத்தி சோனு நிகமை மீட்டனர். ஆனால், சோனு நிகாமுடன் செல்பி எடுக்க முயன்றது உத்தவ் தாக்கரே கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் படெர்பேகரின் மகன் சுவப்நீல் பிரகாஷ் என்றும், அவரும் அவரது நண்பர்களும் சோனு நிகமை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ் அணி) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘உள்ளூர் எம்எல்ஏவின் மகன், பாடகர் சோனு நிகாமை செல்பி எடுக்க முயன்றார். அப்போது சோனு நிகாமின் பாதுகாவலர்கள் அவரை அடையாளம் தெரியாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் கைகலப்பு ஏற்பட்டு ஒன்றிரண்டு பேர் மேடையில் இருந்து கீழே விழுந்தனர்’ என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சோனு நிகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி 323, 341, 337 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : MLA ,Sonu Nigam ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...