×

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ரோமியோ ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: 3 மார்க்கத்திலும் தாக்கும் திறன் படைத்தது

புதுடெல்லி: அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, 2019 ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தலா 4 வீதம் 8 ஏஎச்-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, 24 எம்எச்-60ஆர் ரக போர் ஹெலிகாப்டர்களை ₹13 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் வாங்க ஒப்பந்தம் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிலையில், முதல்கட்டமாக 2 எம்.எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவின்  சான்டியாகோவில் உள்ள கடற்படை விமானதளத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து, இந்திய கடற்படை துணை தலைவர் ரன்வீத் சிங் பெற்றுக் கொண்டனர். இந்த ஹெலிகாப்டர்களில் இந்திய கடற்படையின் தேவைக்கேற்ப மேலும் கருவிகளையும், ஆயுதங்களையும் சேர்த்து மாற்றிக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். மேலும், வான்வழி, கடல் வழி, தரை மார்க்கங்களில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், ஆயுதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.இது குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ந்த ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தியக் கடற்படையின் முப்பரிமாணத் திறன் மேலும் மேம்படுத்தப்படும். இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக இந்தியக் கடற்படையின் முதல் பிரிவு, தற்போது அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறது,’’ என்று அவர் கூறினார்….

The post அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2 ரோமியோ ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு: 3 மார்க்கத்திலும் தாக்கும் திறன் படைத்தது appeared first on Dinakaran.

Tags : US ,Romeo ,India ,New Delhi ,Union government ,Boeing ,United ,States ,Apache ,
× RELATED இந்தியாவின் எதிர்காலம் இந்திய...