×

நடிகை ரோஜா பதவி பறிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் நடிகை ரோஜா. இவருக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜாதிவாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரோஜாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்பதி அடைந்தனர். இதையறிந்த ஜெகன்மோகன், ரோஜாவை அழைத்து சமாதானப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு துறை (ஏபிஐஐசி) தலைவராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்த முதல்வர் ஜெகன்மோகன், எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் பறித்துள்ளார். அதில் எம்எல்ஏ ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என ஜெகன்மோகன் பதவியேற்பு விழாவின்போது தெரிவித்திருந்தார். அதன்படி அடுத்து வரக்கூடிய இரண்டரை ஆண்டுகளுக்கு விரைவில் மாற்றி அமைக்கக்கூடிய அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் சித்தூர் மாவட்டத்தில் மூத்த எம்எல்ஏக்கள் பலர் உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரோஜா ஆதரவாளர்கள் மீண்டும் கடும் அதிருப்தியில் உள்ளனர்….

The post நடிகை ரோஜா பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Roja ,Tirumala ,Andhra State ,Chittoor District Nagari ,Constituency ,YSR ,Congress ,Jaganmohan ,
× RELATED சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி