×

காஸ் கசிந்து மூவர் தீக்காயம்

சென்னை: திருவல்லிக்கேணி தேவராஜன் தெருவை ேசர்ந்தவர் அப்துல் ரஹிம்(58). இவரது மனைவி பாத்திமா பேகம்(52), மகன் நஹித்(22). ேநற்று காலை வீட்டில் 3 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு பாத்திமா பேகம் எழுந்து கணவர் மற்றும் மகனுக்கு டீ போட சமையல் அறைக்கு சென்றார். அப்போது சமையல் காஸ் கசிந்து வீடுமுழுவதும் பரவி இருந்ததை கவனிக்காமல் அடுப்பை பற்றவைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்தது. மேலும், படுக்கை அறையில் தூங்கிய அப்துல் ரஹிம்,  நஹித் ஆகியோர் மீதும் தீப்பிடித்து வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்கும் அலறி துடித்தனர். அருகில் இருந்தவர்கள் 3 பேர் மீது பரவி இருந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீக்காயங்களுடன் 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்….

The post காஸ் கசிந்து மூவர் தீக்காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallykeeni Devarajan Street ,Abdul Rahim ,Fatima Begum ,Son Nahid ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...