×

100 ரூபாய் நாணயத்தில் என்டிஆர்

புதுடெல்லி: என்.டி.,ராமராவின் படத்துடன் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த என்.டி.ராமராவ், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராகவும் இருந்தார். என்டிஆர், 1923ம் ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு ஆகும். இதனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நூற்றாண்டில் அவரை கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயத்தில் என்டிஆரின் உருவத்தை பொறிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து மாதிரி நாணயம் ஒன்றை தயார் செய்து, என்டிஆரின் மகளான புரந்தேஸ்வரியை சந்தித்து அதிகாரிகள் வழங்கியுள்ளனர். விரைவில் இந்த நாணயம் புழக்கத்துக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்