×

காளையார்கோவில் காவல் நிலையத்தில் இருந்து பாம்பு, எலி, விஷவண்டுகளாக கிளம்பி வருது: வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

காளையார்கோவில்: காளையார்கோவில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட கார்கள், டூவீலர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் போதிய பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், புதர் மண்டி கொடிய விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி விட்டது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். காளையார்கோவில் காளையப்பன் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பல வழக்குகளில் பிடிபட்ட கார்கள் மற்றும் டூவீலர்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் புதர் மண்டி கொடிய விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி விட்டது. இந்த காவல் நிலையத்தைச் சுற்றி சர்ச், காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதிக வீடுகள் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இருப்பதால், போலீஸ் ஸ்டேசனில் இருந்து கிளம்புவதால் அப்பகுதி மக்கள் படாதப்பாடு படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘இங்குள்ள போலீஸ் ஸ்டேசனில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட டூவீலர், கார்கள் பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தாமல், ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதி முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. அங்கிருந்து பாம்பு, எலி, விஷவண்டுகள் கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. எனவே, போலீஸ் ஸ்டேசனில் பராமரிப்பின்றி கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி, விஷஜந்துகளை விரட்டியடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்….

The post காளையார்கோவில் காவல் நிலையத்தில் இருந்து பாம்பு, எலி, விஷவண்டுகளாக கிளம்பி வருது: வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalayarkoil ,Police Station ,Kalayarkoil police station ,Dinakaran ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை