×

தூய்மை பணிகள் தீவிரம்

பழநி  நகரின் மத்தியில் வஉசி மத்திய பஸ் நிலையம் உள்ளது. ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்  பெற்ற இப்பஸ் நிலையம் சுகாதார சீர்கேடாக இருப்பதாக  பயணிகள் புகார்  தெரிவித்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.  இதன் எதிரொலியாக பழநி பஸ் நிலையத்தில் கூடுதல் பணியாளர்கள் கொண்டு தூய்மை  பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் கூறியதாவது,  ‘பழநி பஸ்நிலையத்தில் நாள்தோறும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. பிளீச்சிங் பவுடர் போடப்படுகின்றன.  குப்பைகள் உடனுக்குடன் அள்ளப்படுகின்றன. தண்ணீர் லாரி கொண்டு வரப்பட்டு  நீர் பாய்ச்சி சிறுநீர் கழிவுகள் சுத்தம் செய்யப்படுகின்றன’ என்றார்.* பருத்தி விளைச்சல் பாதிப்புஒட்டன்சத்திரம்,  அம்பிளிக்கை, கொசவபட்டி, கள்ளிமந்தயம், இடையகோட்டை, கீரனூர், சத்திரப்பட்டி விருப்பாச்சி, பழக்கணுத்து, செம்மடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் பருத்தி பஞ்சுகள் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர், தற்போது கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கோடை மழை எதிரொலியாக பருத்தி விளைச்சல் கடுமையாக பாதிப்படைந்து உள்ளதாகவும் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை  நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரனோ ஊரடங்கு காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் நூற்பாலைகள் மூடப்பட்டு, மீண்டும் துவங்கியுள்ள நிலையில் தற்போது கோடை மழையினால் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. * புதிய கமிஷனர் பொறுப்பேற்புதிண்டுக்கல்  மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணி இடமாற்றம்   செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக புதிய கமிஷனராக சிவசுப்பிரமணியன்   நியமிக்கப்பட்டார். இவர் நேற்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய   கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். ெதாடர்ந்து அவருக்கு அலுவலக  அதிகாரிகள்,  பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.* நிலக்கடலையில் பூச்சி தாக்குதல்சின்னாளபட்டி அருகே நடுப்பட்டி, பச்சமலையான் கோட்டை பகுதிகளில் வெங்காயம், கத்தரி, பூக்கள் பயிரிட்டு வந்த விவசாயிகள் தற்போது மாற்றுப்பயிராக நிலக்கடலையை பயிரிட்டுள்ளனர். தற்போது நிலக்கடலை செடியில் உள்ள இலைகளில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகளவில் உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் நிலக்கடலை பயிரிட்டோம். இதில் தற்போது இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகளவில் உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. எனவே வேளாண்துறை அதிகாரிகள் நிலைக்கடலை செடிகளை பார்வையிட்டு பூச்சி தாக்குதலுக்கு தீர்வு காண வேண்டும்’ என்றனர்….

The post தூய்மை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Palani City ,ISO ,
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு