×

பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு :ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை என மறுத்த நிலையில் திடீர் சந்திப்பால் அரசியல் அரங்கில் பரபரப்பு!!

டெல்லி : பிரதமர் மோடியை டெல்லி வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து இருப்பது தேசிய அரசியல் வட்டாரங்களில்  முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. பிரதமர் மோடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக சரத்பவார் நிறுத்தப்படுவார் என்று யூகங்கள் வெளியாகின. இதனை சரத் பவரும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து  பேசியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அணி திரட்டலில் ஈடுபட்டு வரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், 2 மாதங்களில் சரத் பவாரை 3 முறை சந்தித்தார். இந்த சந்திப்புகள் சரத்பவாரை பாஜகவுக்கு எதிராக நிறுத்தி குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற செய்வதற்கான முயற்சி என்று அரசியல் விமசகர்கள் கூறிவந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த செவ்வாய் கிழமை அன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்காவை ஆகியோரை கிஷோர் சந்தித்து பேசி இருக்கிறார்.தற்போது பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.குடியரசு தலைவர் பதவி குறித்து பேசுனார்களா ? அல்லது மராட்டிய மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள இரண்டு கட்சிக்கும் முதலமைச்சர் பதவி என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவா என்பது விரைவில் தெரியவரும்.  …

The post பிரதமர் மோடியுடன் சரத்பவார் சந்திப்பு :ஜனாதிபதி தேர்தலில் போட்டி இல்லை என மறுத்த நிலையில் திடீர் சந்திப்பால் அரசியல் அரங்கில் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Modi ,DELHI ,Nationalist Congress Party ,Sarathapwar ,Saratpavar ,PM ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...