×

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க உள்ளார். யாரடி நீ மோகனி, உத்தம புத்திரன், குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இவர் கடைசியாக தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கினார்.
இந்த படம் மெகா ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து இப்போது மாதவன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். மீடியா ஒன் குளோபல் நிறுவனம், இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என தகவல் பரவியது. ஆனால், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது.

Tags : Madhavan ,Mithran Jawahar ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது