×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை!: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 21,000 கனஅடி நீர் திறப்பு..!!

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காரிவியில் 21,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று வரை 14,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று 21,000 கனஅடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடத்தின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தற்போது கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் 17,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கபினி அணைக்கான நீர்வரத்து 19,632 கனஅடியாக உள்ளது. தமிழகத்துக்கு அணையில் இருந்து வினாடிக்கு 8,552 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 19,696 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 2,421 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

The post காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை!: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 21,000 கனஅடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Karnataka dams ,Tamil Nadu ,Bengaluru ,Areas ,Tamil Nagadu ,Karwi ,Dinakaran ,
× RELATED சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை...