×

திருத்துறைப்பூண்டி அருகே 25 ஆண்டாக பராமரிப்பின்றி கிடந்த கிணறு தூர்வாரும் பணி: தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் சத்திரம் ஆற்றங்கரை தெரு பகுதியில் உள்ள கிணற்று நீர் குடிநீராக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் கிணறு தூர்வாரப்படாததால் தூர்ந்து போய்விட்டது. அந்த பகுதி முழுவதும் புதர்மண்டி அந்த இடத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.அந்த பகுதியை ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் துணைத்தலைவர் பாக்கியராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இன்ஜின் வைத்து அசுத்தமான தண்ணீரை இறைத்து தூய்மைப்படுத்தி கிணற்றை தூர்வாரும் பணி மேற்கொண்டனர். கிணற்று தண்ணீரை எடுத்து திருவாரூர் குடிநீர் வடிகால் வாரிய துறைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கிணற்றை ஆழப்படுத்தி அதன் இடிபாடுகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என்றும் கட்டிமேடு பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று ஊராட்சி மன்றத்தினர் தெரிவித்தனர்….

The post திருத்துறைப்பூண்டி அருகே 25 ஆண்டாக பராமரிப்பின்றி கிடந்த கிணறு தூர்வாரும் பணி: தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruthirupundi ,Dinakaran ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்