×

மாளிகைபுரம் மெகா ஹிட் :சபரிமலைக்கு போனார் உன்னி முகுந்தன்

சென்னை : தனுஷ் நடித்த சீடன் படம் மூலமாக தமிழில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தொடர்ந்து அனுஷ்காவுடன் நடித்த பாகமதி, சமீபத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர்.

இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்த மாளிகைபுரம் என்கிற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. சுவாமி ஐயப்பனையும் அவருக்காக சன்னிதானத்தில் காத்திருக்கும் மாளிகைபுரத்தம்மனையும் மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஐயப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உன்னி முகுந்தன்.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது நன்றியை செலுத்துவதற்காக சபரிமலைக்கு சென்று வழிபட்டு வந்துள்ளார் உன்னி முகுந்தன். இது குறித்து அவர் கூறும்போது, ​ அடுத்தடுத்த வருடங்களில் இதே மகர ஜோதி தினத்தில் நான் இங்கே வரும்போது, இந்த அடுத்தடுத்த முன்னேற்றங்களுடன் வரவேண்டுமென இறைவனை வேண்டிக்கொண்டேன்” என்று உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.

Tags : Mukundan ,Sabarimala ,
× RELATED போதையில் தகராறு செய்த இந்து முன்னணி பிரமுகருக்கு அடி உதை