×

மஞ்சிமா இல்லாத எஃப்ஐஆர் 2

செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்த விஷ்ணு விஷால், இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசியபோது, இந்த ஆண்டில் ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்களின் 2ம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி திரைக்கு வந்த படம், ‘எஃப்ஐஆர்’. அதாவது, ‘பைசல் இப்ராஹிம் ரெய்ஸ்’ என்பதின் சுருக்கமே ‘FIR’.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்த இப்படத்தை மனு ஆனந்த் இயக்கினார்.‌ விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தனர். இந்நிலையில், ‘எஃப்ஐஆர்’ படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என்று விஷ்ணு விஷால் உறுதி செய்துள்ளார். கவுதம் கார்த்திக்கை காதல் திருமணம் செய்த மஞ்சிமா மோகனுக்கு ‘எஃப்ஐஆர்’ 2ம் பாகத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Tags : Manjima ,
× RELATED ஆர்யா, கவுதம் கார்த்திக் இணையும் படத்தில் மஞ்சு வாரியர்