×

நடிகரின் பேச்சை கண்டித்த அனசுயா

தெலுங்கு நடிகர் சிவாஜி, சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, ‘பெண்களின் அழகு சேலையில்தான் இருக்கிறது. அங்கங்கள் தெரியும்படி உடையணிவது பெரும் பிரச்னையை வரவழைக்கும். ஹீரோயின்கள் கண்டபடி ஆடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று பேசினார். அவரது அநாகரீகமான கருத்துக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து, தான் பேசிய கருத்துக்கு சிவாஜி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

நடிகரின் இக்கருத்துக்கு தொகுப்பாளினியும், நடிகையுமான அனசுயா பரத்வாஜ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘யார் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆடை என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். சிவாஜியின் மனநிலையை பார்த்து நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Anasuya ,Sivaji ,Hyderabad ,Anasuya Bhardwaj ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்