×

கொள்ளை வழக்கு 4 பேர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதுதொடர்பாக, பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (21), ஹேமநாதன் (20), லோகேஷ்(18), ராஜா(23) ஆகியோர், மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார், 4 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 சவரன், 400 கிராம் வெள்ளி பொருட்கள், 10 கிலோ பித்தளை பொருட்கள், 1 டிவி, 2 லேப்டாப், 15 கிலோ பித்தளை பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். …

The post கொள்ளை வழக்கு 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Kattupakkam ,Chenneerkuppam ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி...