×

நீரிழிவு நோய் உள்ளதா என 1 கோடி பேருக்கு சோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை:சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள துனை சுகாதர அலுவலர்கள், மாநகராட்சியில் பணியாற்றும் துணை ஆணையர்கள், சுகாதார  அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  1 கோடி நபர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிய மெகா அளவில் ஸ்கீரினிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது வீடுகளுக்கே சென்று ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் செய்வது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதன் பின்பு அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அதன் பின்பு 10-15 நாட்களில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் 20 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் மூலமாக  நீரழிவு நோயாளிகளை கண்டுபிடித்து அதை 6 மாத காலத்திற்குள் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம், என்றார். …

The post நீரிழிவு நோய் உள்ளதா என 1 கோடி பேருக்கு சோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,CHENNAI ,Minister of People's Welfare ,Chennai DMS ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...