×

பெருங்குடி பள்ளிக்கூட சாலை மயானபூமியில் பராமரிப்பு பணி

சென்னை: பெருங்குடி பள்ளிக்கூட சாலையில் உள்ள மயானபூமியில்  பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால்,  பெசன்ட் நகர் மற்றும் புழுதிவாக்கம் மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:  பெருங்குடி மண்டலம், வார்டு-184, பள்ளிக்கூட சாலையில் உள்ள மயான பூமியின் எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,  நாளை (15ம் தேதி) முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை (21 நாட்கள்) பள்ளிக்கூட சாலை மயானபூமியில் எரிவாயு தகனமேடை  இயங்காது. இந்நாட்களில் பொதுமக்கள் பெசன்ட் நகர் மற்றும் புழுதிவாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post பெருங்குடி பள்ளிக்கூட சாலை மயானபூமியில் பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Perungudi School Road ,CHENNAI ,Besant Nagar ,Purudivakkam ,Perungudi ,School ,Road ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...