×

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள பிரதான ஓடையை தூர்வாரும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பொட்டுமேடு பகுதியிலிருந்து செல்லும் கழிவு நீரோடையானது மரப்பேட்டை, நேருநகர், சிடிசி மேடு, கண்ணப்பன் நகர் வழியாக கிருஷ்ணா குளத்தை சென்றடைகிறது. இந்த ஓடையில், நகரில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வணிக வளாகங்களிலிடருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து செல்வதால் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த ஓடையின் ஆழம் குறைவாக இருப்பதால் மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவுநீருடன் சேர்ந்து புகுந்து விடும் நிலை ஏற்படுகிறது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துவிடாமல் இருக்க குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை,  மழைக்காலத்தில் பிரதான ஓடையில் தூர்வாரும் பணி நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை விரைவில் வலுக்கும் என்பதால், பிரதான கழிவுநீர் ஓடையில் சேறும் சகதியும் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் தூர்வாரும் பணி நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. இதனை, சப்-கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி பொறியாளர் மேனகா மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். பொட்டுமேடு பகுதியிலிருந்து கண்ணப்பன் நகர் வரையிலும் உள்ள சுமார் 5கி.மீ. தூரத்துக்கு இன்னும் ஒரு வாரத்தில், பொக்லைன் கொண்டு தூர்வாரி ஆழப்படுத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள பிரதான ஓடையை தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Pottumedu ,Marappettai ,Nehru Nagar ,CDC Medu ,Kannapan Nagar ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...