×

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கரும்புக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று காலை 10 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 5 நபர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, செல்வி நர்மதா (வயது 11) என்ற சிறுமி திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றதால், அச்சிறுமியைக் காப்பாற்றுவதற்காகத் சுமதி (வயது 35), திருமதி ஜோதி (வயது 35), செல்வி அஸ்விதா (வயது 14), செல்வி ஜீவிதா (வயது 14) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக ஆழமான பகுதிக்குச் சென்றபோது, மேற்படி 5 நபர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.       இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்….

The post கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kummhipundi ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,Gummipundi ,Gummhipundi ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...