×

48வது படத்தில் செஃப் ஆகிறார் அனுஷ்கா

ஐதராபாத்: தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தில் செஃப் கேரக்டரில் நடிக்கிறார் அனுஷ்கா. 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படத்துக்கு பிறகு பாக்மதி படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். 2 வருடங்களுக்கு முன் கடைசியாக சைலன்ஸ் என்ற படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். இதில் மாதவன் ஹீரோ. இந்த படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அனுஷ்கா, புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். நேற்று முன்தினம் தனது 41வது பிறந்த நாளை அவர் கொண்டாடினார். அப்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். அதையும் சேர்த்தே கொண்டாடினார்.

கடந்த 2005ம் ஆண்டு நாகார்ஜுனா நடித்த சூப்பர் தெலுங்கு படத்தில்தான் அனுஷ்கா அறிமுகமானார். தமிழில் மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்தார். 17 ஆண்டுகளில் 47 படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் நடிக்க உள்ள புதிய படத்தில் அன்விதா ரவளி ஷெட்டி என்ற கதாபாத்திரத்தில் நட்சத்திர ஓட்டல் செஃப் ஆக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மகேஷ் என்பவர் இயக்குகிறார். அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ‘இந்த படத்துக்காக பெண் செஃப்கள் சிலரை பார்த்து அவர்களின் மேனரிசத்தையும் அவர்களின் பணிகளையும் பற்றி அனுஷ்கா அறிந்துகொண்டார். இம்மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags : anushka ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’