கமல், மணிரத்னம் தனித்தனியாக கொடுத்த பார்ட்டியில் கோலிவுட் நட்சத்திரங்கள்

சென்னை: கமல்ஹாசன், மணிரத்னம் தனித்தனியே கொடுத்த பார்ட்டியில் கோலிவுட் நடிகர், நடிகைகள் பலர் கலந்துகொண்டனர். கமல்ஹாசனுக்கு நேற்று முன்தினம் 68வது பிறந்த நாள். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்தார். இதில் விக்ரம், சிம்பு, பிந்து மாதவி, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், லிங்குசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக மணிரத்னம் சார்பில் தரப்பட்ட பார்ட்டியில் ரஜினிகாந்த், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், பார்த்திபன், திரிஷா, ஜெயராம், லிசி, குஷ்பு உள்பட பலர் கலந்துகொண்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓரிரு ஆண்டுகளாக சினிமா வட்டாரத்தில் பார்ட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது அவை மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.

Related Stories: