- சிவராஜ் குமார்
- ரமேஷ் ரெட்டி
- சூரஜ் புரொடக்ஷன்ஸ்
- டாக்டர்
- சிவராஜ் குமார்
- உபேந்திரன்
- ராஜ் பி.
- ஷெட்டி
- அர்ஜுன் ஜன்யா
- ஏஜிஎஸ் என்டர்ட
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
சுராஜ் புரடெக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி நடிப்பில், இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘45’. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் 2026 ஜனவரி 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏஜிஎஸ் எண்டடெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பதிப்பு முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். டாக்டர் சிவராஜ்குமார் அவர்களின் அர்ப்பணிப்பு, உபேந்திரா மற்றும் ராஜ் B. ஷெட்டியின் நடிப்பு, அர்ஜுன் ஜான்யாவின் இயக்கம் ஆகியவற்றை விஜய் ஆண்டனி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி உள்ளிட்டோர் படத்தின் உருவாக்கம் குறித்து பகிர்ந்து கொண்டனர். நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து, ‘45’ ஒரு மாறுபட்ட உலகத்தை கொண்ட படம் என தெரிவித்தனர்.
நடிகர் ராஜ் B. ஷெட்டி பேசியதாவது…
தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி. தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் சினிமா கலந்துள்ளது. அவர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். சிவாண்ணாவை ஜெயிலர் படத்திலும், உபேந்திராவை கூலி படத்திலும் கொண்டாடினார்கள். நல்ல சினிமா இங்கு கொண்டாடப்படும். தமிழ் சினிமா கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது.
அர்ஜுன் ஜான்யா மூன்று வருடம் இப்படத்திற்காக உழைத்துள்ளார். நானும் இயக்குநர்தான்; ஆனால் அவர் உழைப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். தயாரிப்பாளர் இப்படத்தைத் தோள்மீது தாங்கியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் உபேந்திரா பேசியதாவது…
நான் சிவாண்ணா பேச்சைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. அவருடன் நான் வேலை பார்த்துள்ளேன்; அவருடைய வளர்ச்சி எனக்குப் பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் அர்ஜுன் ஜான்யா இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். தயாரிப்பாளர் இப்படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்.
ராஜ் B. ஷெட்டி அற்புதமாக நடித்துள்ளார். சிவாண்ணா எனக்கு ஓம் படம் மூலம் பிரேக் தந்தவர். இதில் கலக்கியுள்ளார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது…
நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால் அதை மிஸ் செய்து விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.
வின்செண்ட் சின்ன வயதிலிருந்து என் நண்பர்; அவர் என் சகோதரர் போலத்தான். ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி. அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார். நான் தான் முதலில் கதை கேட்டேன்; என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார்.
அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகியுள்ளார்; விரைவில் நடிகராக ஆகிவிடுவார்.
உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை; அவர் தான் எனக்கு பிரேக் தந்தார். அவர் அட்டகாசமான கலைஞன். ராஜ் B. ஷெட்டி சமீபமாக கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி படத்தில் அட்டகாசமாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம்; படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.
