×

இந்தி படத்தில் நடிக்க யாஷ் மறுப்பு

பெங்களூர்: இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் யாஷ் மறுத்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர், கன்னட நடிகர் யாஷ். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் பல வாய்ப்புகள் வந்தன. எந்த பட வாய்ப்பையும் அவர் ஏற்கவில்லை. அடுத்ததாக பிரமாண்ட படத்தில் நடிக்க அவர் விரும்புகிறார். இதற்கிடையே, ரன்பீர் கபூர், அலியா பட் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹிர்த்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகியோரிடம் இயக்குனர் அயன் முகர்ஜி பேசி வந்தார். அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் நடிகர் யாஷிடம் பேசி வந்தனர். தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை அவர்கள் சந்தித்துப் பேசியும், யாஷ் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த தகவல் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதேபோல், பாலிவுட் டைரக்டர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் கர்ணா சரித்திர படத்திலும் நடிக்க யாஷ் மறுத்துவிட்டாராம்.

Tags : Yash ,
× RELATED துப்பாக்கி, பில்லா 2 பட வில்லன் வித்யூத் ஜம்வால் நிர்வாண ‘போஸ்’