×

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினி

சென்னை: ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இதற்கு முன் 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது மூன்றாவதாக அவர் இயக்க உள்ள படத்துக்கு லால் சலாம் என பெயரிட்டுள்ளார். இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இத்துடன் ரஜினி நடிக்கும் மற்றொரு படத்தையும் லைக்கா தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கான பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ரஜினி கலந்துகொண்டார். லால் சலாம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படம் சமூக பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கான ஹீரோயின்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tags : Aishwarya ,Rajini ,
× RELATED ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணமா? அர்ஜூன் தாஸ்