×

நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை: சென்னையில் சிவராஜ்குமார் பேட்டி

சென்னை, டிச.23: கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘45 தி மூவி’. இதை கன்னட இசை அமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா எழுதி இயக்கியுள்ளார். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்றிரவு சென்னையில் நடந்தது.

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிவராஜ்குமாரிடம், ‘தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பிரபல நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருகின்றனர். அதுபோல், கர்நாடகாவில் இருக்கும் நீங்கள் மற்றும் உபேந்திரா போன்றோர் ஏன் அரசியலுக்கு வருவது இல்லை?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், ‘எனக்கு அரசியல் தெரியாது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக அதை செய்வோம். அதற்கு அதிகாரம் தேவை இல்லை. இப்போது நான் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்ய முடியும். அதில் பாரபட்சம் கிடையாது. ஆனால், அரசியலில் சில நேரத்தில் அப்படி செய்ய முடியாது. சிலரால் மட்டுமே அது முடியும். எல்லோராலும் முடியாது. நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்ய முடியும். யாரை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், இது என் சொந்த பணம்’ என்றார்.

Tags : Sivarajkumar ,Chennai ,Upendra ,Raj P. Shetty ,Arjun Janya ,Tamil Nadu ,MGR ,Karnataka ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்