×

நடால், செரீனாவை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பியான்கா ஆன்ட்ரியஸ்க் விலகல்

கனடா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் விலகிய நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரியஸ்கும் விலகுவதாக அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதனையடுத்து உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் பல வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். குறிப்பாக பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகினர்.இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனை கனடாவை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரியஸ்க் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில், “நான் சிறுமியாக இருந்தபோதே ஒலிம்பிக்கில் என் நாட்டை (கனடா) பிரதிநிதித்துவப்படுத்திய ஆகவேண்டும் என்பது கனவாக இருந்தது. ஆனால் இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது மிகமிக கடினமான முடிவு. துரதிர்ஷ்டமான முடிவு. அதே நேரத்தில் தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து சவால்களும் என் இதயத்தில் ஆழமாக இருப்பதை நான் அறிவேன். இந்த முடிவு எனது சரியான முடிவு என்று கருதுகிறேன். எதிர்கால ஃபெட் கோப்பை போட்டிகளில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவும், பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன்’’ என பதிவிட்டுள்ளார்….

The post நடால், செரீனாவை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பியான்கா ஆன்ட்ரியஸ்க் விலகல் appeared first on Dinakaran.

Tags : Bianca Antreusk ,Tokyo Olympics ,Nadal ,Serena ,Canada ,Rafael Nadal ,Serena Williams ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்