×

திலீபுடன் பூஜையில் கலந்து கொண்ட தமன்னா

சென்னை: நடிகை தமன்னா முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்கிறார். அருண் கோபி இயக்கும் படத்தில் அவர் திலீப் ஜோடியாக நடிக்கிறார். சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 10ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் கொல்லம் அருகில் உள்ள கொட்டாரக்கரா ஸ்ரீமகா கணபதி கோயிலில் நடந்த படத்தின் பூஜையில் நடிகை தமன்னா திலீபுடன் கலந்து கொண்டார். இதையொட்டி கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண் மற்றும் ஆண் பவுன்சர்கள் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். தமன்னாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் கோயிலுக்கு தமன்னா வருவதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள திலீபுடன் அவர் நடிப்பது குறித்து அவரது ரசிகர்களில் ஒரு பகுதியினர் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

Tags : Tamannaah ,Dileep ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...