×

ஹரீஷ் கல்யாணுக்கு பெண் குழந்தை

தமிழ்ப் படவுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர், ஹரீஷ் கல்யாண். சசி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘நூறு கோடி வானவில்’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. தனது நீண்ட நாள் காதலி நர்மதாவை கடந்த 2022ல் ஹரீஷ் கல்யாண் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இத்தம்பதிக்கு நேற்று ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதை தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஹரீஷ் கல்யாண், தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Harish Kalyan ,Sasi ,Narmada ,
× RELATED கண்கள் வயிறு வீங்கியது: ஸ்ருதிகாவுக்கு என்ன பிரச்னை?