×

விஜய்க்கு வில்லனாகும் கவுதம் மேனன்

சென்னை: விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார் இயக்குனர் கவுதம் மேனன். விஜய், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஜெயசுதா நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. வம்சி பைடிபள்ளி இந்த படத்தை இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதில் விஜய்க்கு வில்லனாக பல நடிகர்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக சஞ்சய் தத் இடம்பெற்றுள்ளார். அதேபோல், சமந்தாவும் இதில் வில்லி வேடம் ஏற்பதாகவும் மன்சூர் அலிகான் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பல படங்களில் முக்கிய வேடங்களில் கவுதம் மேனன் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் அவர் ஒரு படம் இயக்கவும் இருந்தார். இந்த படத்துக்கு யோவான் முதல் அத்தியாயம் என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் தொடங்கவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் படம் மூலம் விஜய், கவுதம் மேனன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமை அடைந்ததும் கவுதம் மேனன் நடிப்பது உறுதி செய்யப்படும் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Vijay ,Gautham Menon ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...