×

இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை உயர்த்தக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை:  மதுரை மாவட்டம், மலையாண்டிபுரத்தைச் சேர்ந்த ஜலாலுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள்தொகை உயர்வுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. இதனால், இஸ்லாமியர்களால் அரசின் சலுகைகளையும், வாய்ப்புகளையும் முழுமையாக பெற முடியாத நிலை உள்ளது. கேரளாவில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியதைப் போல, இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் இட ஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கில் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்….

The post இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை உயர்த்தக்கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Muslims ,Madurai ,Jalaluddin ,Malayandipuram, Madurai district ,ICourt ,Tamil Nadu ,
× RELATED முஸ்லிம்கள் பற்றி பேச வில்லையா?...