×

தெலங்கானாவில் கட்சி தொடங்கினார் ஷர்மிளா

ஐதராபாத்: ஆந்திராவில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி, ஆந்திராவில் ஆட்சியை பிடித்து முதல்வராக இருந்து வருகிறார். இவருக்கு தேர்தலில் உறுதுணையாக இருந்த அவருடைய சகோதரி ஷர்மிளா, ஆந்திராவில் பிரிந்து புதிய மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக, புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான நேற்று, ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ‘ஓஎஸ்ஆர் தெலங்கானா கட்சி’ என்ற புதிய கட்சியை அவர் தொடங்கினார். நலவாழ்வு, சுய முன்னேற்றம், சமத்துவம் ஆகிய மூன்று குறிக்கோளுடன் தனது கட்சி தொடங்கப்பட்டு இருப்பதாக கூறிய ஷர்மிளா, தனது கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஷர்மிளாவின் தாயார் விஜயம்மாவும் கலந்து கொண்டார்….

The post தெலங்கானாவில் கட்சி தொடங்கினார் ஷர்மிளா appeared first on Dinakaran.

Tags : Sharmila ,Telangana ,Hyderabad ,Jagan Mohan Reddy ,Chief Minister ,Rajasekhara Reddy ,Andhra Pradesh ,YSR Congress ,Dinakaran ,
× RELATED அண்ணன் ஜெகனின் ஆட்சியை கவிழ்த்த தங்கை: சர்மிளாவும் தோல்வி