×

இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உப்பிலியாபுரம் பகுதிகளில் 5,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை கொள்முதல் செய்ய தங்கநகர், பி. மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய ஐந்து இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது. இங்கு பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்துள்ள நிலையில், இடைத்தரகர்கள்  தலையீடு காரணமாக நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதுபோல், பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும், நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கொள்முதலுக்கான டோக்கன் வழங்குவது சரிவர நடப்பதில்லை என்றும், பணம் பெற்றுக்கொண்டு ஒரு சிலர் சிபாரிசு செய்பவர்களிடம் இருந்து மட்டுமே நெல்லை அளக்க முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். விவசாயிகளை கசக்கி பிழியும் இடைத்தரகர்களை முதலமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலை விரைவுபடுத்திட வேண்டும்….

The post இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Govt. ,Chennai ,Edappadi Palaniswami ,Uppiliyapuram ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...