×

போக்சோவில் சிறுவன் கைது

ஆலந்தூர்: பெரும்பாக்கம் எழில் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் 16 வயது சிறுவன், அதே குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமியை, கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதற்காக நேற்று முன்தினம்  மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது, விளையாடுவது போல் நடித்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுபற்றி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்து, சென்னையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். சிறுமிக்கு திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது….

The post போக்சோவில் சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Boxo ,Alandur ,Sagil Nagar Cottage ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில்...