×

100 கோயில்களில் நந்தவனம்: அறநிலையத்துறை அசத்தல் திட்டம்

சென்னை: தமிழகத்தில் 100 முக்கிய கோயில்களில் நந்தவனம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து இட வசதி உள்ள கோயில்களின்விவரங்களை அனுப்பி வைக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் நந்தவனம் அமைக்க அறநிலையத்துறை முடிவு செய்து, பலக்கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, 100 கோயில்களில் நந்தவனம் அமைக்க தீர்மானித்தது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோயில்களில் நந்தவனம் அமைப்பதற்காக விவரங்களை சேகரித்து வருகிறோம்.நந்தனம் அமைக்கப்பட உள்ள 100 கோயில்களின் பட்டியலை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. கோயில்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பேரில், வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். அதை தொடர்ந்துதான் நந்தவனம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும். இருப்பினும், காலதாமதம் இன்றி விரைவாக இப்பணிகளை முடிப்பதற்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்றார்….

The post 100 கோயில்களில் நந்தவனம்: அறநிலையத்துறை அசத்தல் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Charities Department ,Nandavanam ,Tamil Nadu ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...