×

தாந்தோணிமலை பகுதியில் பட்டியில் அடைத்து வாத்துகள் விற்பனை விறுவிறுப்பு

கரூர் : கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், சோமூர், வாங்கல் போன்ற பகுதிகளில் அதிகளவு வாத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றங்கரையோரம் வளர்க்கப்பட்டு வரும் இந்த வாத்துக்களை வாரந்தோறும் கருர் நகர மக்கள் வாங்கி வந்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்தும் வாத்துக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வாத்துக்கள், தாந்தோணிமலை அருகே சாலையோரம் அடைத்து வைத்து ஜோடி வாத்துக்கள் ரூ. 550க்கு விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களும் தங்களுக்கு தேவையான வாத்துக்களை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post தாந்தோணிமலை பகுதியில் பட்டியில் அடைத்து வாத்துகள் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Dandonimalai ,Karur ,Velayuthampalayam ,Somur ,Wangal ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு கடந்த 3 ஆண்டு...