×

தெலுங்கில் வெளியாகும் பிசாசு 2

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக முருகானந்தம் தயாரிக்கும் படம் பிசாசு. கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.  கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மிஷ்கின் இயக்கி உள்ளார்.

இந்த படம் தெலுங்கில் பிசாச்சி 2 என்ற பெயரில் வெளியாகிறது. படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் திரையரங்கு விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷின் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.

Tags :
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!